Random image

அரியானா : ஜனாதிபதி விருது பெற்ற மாணவி கூட்டு பலாத்காரம்

குருகிராம்

சிபிஎஸ்ஈ தேர்வில் முதலாவதாக வந்து ஜனாதிபதி விருது பெற்ற கல்லூரி மாணவியை சிலர் கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலத்தில் குருகிராம் நகரில் வசிக்கும் ஒரு 19 வயதுப் பெண் அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.   படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான அந்தப் பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவ்ர் ஆவார்.

அவர் நேற்று கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று இளைஞர்கள் அவரை ஒரு காரில் கடத்திச் சென்றனர்.   அவரை ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வயலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.   அங்கு அவரை  அந்த மூவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.   அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

அப்போது அந்தப் பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர்.   இது குறித்து அந்தப் பெண்  தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.   அந்தப் பெண்ணின் தந்தை இது குறித்து அளித்த புகாரைப் பெற காவல்நிலையத்தினர் மறுத்துள்ளனர்.

தாம் பல காவல் நிலையங்களுக்கு  சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க அங்கு மறுத்த பின் அவர் நேரடியாக காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறி உள்ளார்.   அவர் இந்த புகாரை பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளார்.