ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

புதுக்கோட்டை:

மிழ்நாட்டில் நெடுவாசலில் மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்தியஅரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் என்றும் தண்ணீர் கிடைக்காமல் போய் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், திட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இன்று மதுரை கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை நெடுவாசலில் மத்தியஅரசு செயல்படுத்த முனையும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மதுரை  மாவட்ட நீதிமன்றம் முன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர்.