சென்னை: வளாக நேர்காணலுக்கான திறன் பயிற்சி வகுப்புகளை, இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தி வருகின்றன பல கல்லுாரிகள்.

ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்தக் கல்வியாண்டு துவக்கத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வளாக நேர்காணல், வேலைவாய்ப்பு குறித்து எதுவும் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதையடுத்து, சில கல்வி நிறுவனங்கள், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வளாக நேர்காணல் திறன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்காக, சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் தங்கள் மாணவர்களின் திறனை மேம்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்புக்கான தகுதிபெறும் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்துகின்றன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; நிறுவன இணையதளம் மூலம் மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கட்டணம் இல்லாமல் படிக்கின்றனர். முன்னணி நிறுவனங்களை சேர்ந்த 100 தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தொழில்நுட்பம் தொடர்பான ஒரு மாத இணைய வகுப்புகளையும் நடத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.