திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்ப் பரவலால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் ஜனவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 மாதங்கள் கழித்து இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படத் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக இளங்கலையில் இறுதியாண்டு மாணவர்கள், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.

என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களில் 3, 4ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்குகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு 5 மணி நேரம் நடத்தவும் கல்லூரி நிறுவனங்களில் முறையாக கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.