சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் 3 பேரை நிரந்தர நீதிபதிகளாக கொலிஜியம் பரிந்துரை

டில்லி:

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 3 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றி வரும், கூடுதல் நீதிபதிகள் டீக்காராமன், சேஷசாயி, சதீஷ்குமார் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் பணியை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் தலைமையிலான கொலிஜியம்  செய்கிறது. கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு ஏற்று அறிவிப்பானை வெளியிடுகிறது.

இந்த நிலையில்,  உச்சநீதி மன்ற தலைமைநீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றதை தொடர்ந்து புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியிம் கூடியது . இதில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 3 பேரை நிரந்தர நீதிபளாக நியமிக்க கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.