மோடி அரசுடன் மோதல்: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா

டில்லி:

மத்தியஅரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்த நிலையில், ரிசர்வ் வங்கி தலைவர் பொறுப்பில் இருந்து உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் மத்தியஅரசு தலையீடு காரணமாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக  ரிசர்வ் வங்கி  ஆளுநர் உர்ஜித் படேல் தன் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பில் இருந்து உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற குழுவிற்கு முன்  உர்ஜித் படேல் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கனவே கடந்த நவம்பர்  19ம் தேதி ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் மத்திய அரசு தலையீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து,  மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி அமைச்சகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார். தனது சொந்த காரணங்ளுக்காக பதவி விலகுவதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், மோடி அரசின் தன்னிச்சையான பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கை காரணமாக பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.