உலகக்கோப்பை கால்பந்து: ‘எச்’ பிரிவில் கொலம்பியாவின் அதிரடியால் போலந்து வெளியேற்றம்

கசான்:

லககோப்பை கால்பந்து போட்டி தொடரின் ‛எச்’ பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து அணியை கொலம்பிய அணி பந்தாடியதால், போலந்து அணி போட்டியில் இருந்து வெளியேறியது. அடுத்து வெளியேறப்போவது யார் என்று ஜப்பான், செனகல், கொலம்பிய அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

நேற்று ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், கொலம்பியாவுக்கும், போலந்துக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், போலந்தை மடக்கிய கொலம்பிய  3- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பிபா உலகக் கோப்பை தொடரின் ‘ எச்’ பிரிவில் கொலம்பியா மற்றும் போலந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும் என்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக நடைபெற்றது. இந்த இரு அணிகளும் தொடக்கத்திலேயே தோல்வியை தழுவி யார் முதலில் வெளியேறுவது என்ற நிலையில் தொடர்ந்து வந்தது.

ஏற்கனவே எச் பிரிவில் நடைபெற்ற  முதல் ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்றது. இரண்டா வது ஆட்டத்தில் செனகல் 2-1 என போலந்தை வென்றது. அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஜப்பான், செனகல் அணியே நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் 2-2 என செனகலுடன் டிரா செய்தது. அதையடுத்து தலா 4 புள்ளிகளுடன் ஜப்பான் மற்றும் செனகல் உள்ளன.

இந்த நிலையில், எச் பிரிவின்2வது   ஆட்டத்தில் போலந்து, கொலம்பியா அணிகள்  மோதின. இதில் 3-0 என கொலம்பியா வென்றது. இதன் மூலம் இரண்டு தோல்விகளை சந்தித்த போலந்து பிரிவு சுற்றுடன் வெளியேறியது.  ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் எர்ரி மினா கோலடிக்க கொலம்பியா 1-0 என முன்னிலை பெற்றது. பால்கோ 70வது நிமிடத்தில் கோலடிக்க கொலம்பியா 2-0 என முன்னிலையை அதிகரித்தது. 75வது நிமிடத்தில் ஜூவான் குவாட்ராடோ அணியின் மூன்றாவது கோலை அடித்தார். போலந்தால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

இந்த பிரிவில் இருந்து ஜப்பான், செனகல் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதால் போலந்து அணி வெளியேறியது. அடுத்த சுற்றுக்கு முன்னேற 4 புள்ளிகளுடன் உள்ள ஜப்பான், செனகல் மற்றும் 3 புள்ளிகளுடன் உள்ள கொலம்பியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.