ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்:

ம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிந்த்வாராவில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

“வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் அனுஜ் சூத், இரண்டு வீரர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர்.வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாராவில் உள்ள சாங்கிமுல்லாவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்கிறார்கள் என்ற உளவுத்துறையின் தகவலின் படி, ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் தங்களது கூட்டு நடவடிக்கையை தொடங்கினர்.

பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ள இலக்கு பகுதிக்குள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற பொதுமக்களை ஐந்து வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் தைரியமாக அந்த பகுதிக்குள் நுழைந்து வெற்றிகரமாக மீட்டு வந்தனர். இந்த நடவடிக்கையின் போது, வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், மேலும் நமது ராணுவ கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் அனுஜ் சூத், இரண்டு வீரர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணை காவல் ஆய்வாளர் ஷகீல் காசி உள்ளிட்ட ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிடமிருந்து ஊடுருவக்கூடிய குழுவைப் பெற பயங்கரவாதிகள் ஹந்த்வாராவுக்கு வந்ததாக நம்பப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்த கர்னல் அசுதோஷ் சர்மா மற்றும் மேஜர் அனுஜ் சூத் தவிர, மற்ற ராணுவ வீரர்கள் நாயக் ராஜேஷ் மற்றும் லான்ஸ் நாயக் தினேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீரமரணம் அடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எண்கவுண்டரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வீரர்கலின் வீர மரணம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இது தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அவர்கள் வீரமுடன் போரிட்டதை பறை சாற்று வகையில் உள்ளது. அவர்களது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும் நாம் எப்போதும் மறக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முப்படை தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் உயிரை கொடுத்து நாட்டை காப்பற்றிய ராணுவ வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது என்றார்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மிர் காவல் அதிகாரி இமிதியாஸ் ஹுசைன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இரவு முழுவதும் நடந்த நீண்ட போராட்டத்தில் தீவிரவாதிகளை வெற்றி கொண்டு உயிர் நீத்த ராணுவ வீரர்களின் தைரியம் பாரட்டுதலுக்குரியது என்றார்.

முன்னாள் ஜம்மு காஷ்மிர்ர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று காலை ஹண்ட்வாராவில் கடமையை செய்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த  இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஜவான் பற்றி கேள்விப்பட்டதும் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களின் ஆத்மாக்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். இந்த கடினமான நேரத்தில் அவர்களது குடும்பங்கள் மற்றும் சகாக்கள் பலம் காணட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.