தீபாவளி பண்டிகை: வண்ணமயமாக இயக்கப்படும் மெட்ரோ ரயில் (படங்கள்)

சென்னை:

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களின் பெட்டிகள்  அலங்காரம் செய்யப்பட்டு கண்ணை கவரும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் 2 கட்டங்களாக மெட்ரோ ரயில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

தற்போது சென்னை சென்ட்ரல் முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கூட்டம் சுமாரகவே இருந்த நிலையிலும் மெட்ரோ ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகக்காக கூடுதல் நேரமும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் உட்புறங்கள் வண்ணமயமாக  அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் வரை இயக்கப்படும் ரயில்களில் அலங்கா​ர​ தோரணங்களும் வாழ்த்து ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகளுடன் தீபாவளியை கொண்டாடும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இதனை செய்துள்ளது.


மேலும் தீபாவளிக்காக மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி அதிக அளவிலான பயணிகள் வெளியூர் செல்ல கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு பயணிப்பார்கள் என்பதால், வழக்கமாக இரவு 10 மணி வரை செயல் படும் மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.