சரத்குமார் சகோதரர் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘கலர்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்….!

வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள கலர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.. நிசார் இயக்கும் இந்த படத்தில் வரலக்ஷ்மி உடன் நடிகர் சரத்குமாரின் சகோதரரின் மகன் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இந்த தகவலை நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நிசார் மலையாளத்தில் சுமார் 25 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார்.

கலர்ஸ் படத்தில் மலையாள நடிகை இனியா ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும் இதில் ஹீரோவாக நடித்துள்ள ராம்குமார் சரத்குமாரின் சகோதரரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.