டாக்கா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்க தேச வீரரக்ளுக்கான அங்கியில் எழுத்துக்களின் நிறம் மாற்றப்பட உள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளில் வங்க தேச அணி வீரர்கள் அணியும் அங்கியின் மாதிரி வெளியானது. இதில் வங்க தேச கொடியில் உள்ளது போல் பச்சை மற்றும் சிவப்பு நிறம் இருந்தது. பச்சை நிற அங்கியில் சிவப்பு நிற எழுத்துக்கள் பதியப்பட்டன. அதன் பிறகு சிவப்பில் வெள்ளை நிற எழுத்துக்கள் பதியப்பட்டன. அதன் பிறகு பச்சை அங்கியில் வெள்ளை நிற எழுத்துக்களுடன் அங்கி தயாரிக்கப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பச்சை நிறத்தில் சிவப்பு நிறம் உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இதற்கு காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதை சர்வதெச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது. பச்சை நிறத்தில் சிகப்பு பட்டையில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் இருந்தால் அவற்றை படிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என தாம் அறிவுறுத்தியதாக தெரிவித்தது.

நேற்று டாக்காவில் இந்த அங்கியின் இறுதி வடிவத்தை வெளியிட்டது. ஆனால் இந்த புதிய அங்கிக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த அங்கியில் சிவப்பு நிறம் எங்குமே காணப்படவில்லை எனவும் அந்நாட்டு கொடியில் சிவப்பு உள்ள்தால் அங்கியிலும்சிவப்பு இருக்க வேண்டும் என வங்க தேச கிரிக்கெட் வாரிய அணியின் ஒரு பிரிவினர் வற்புறுத்தி உள்ளனர்.

எனவே மீண்டும் அங்கியின் நிறத்தில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.