டில்லி:

‘‘உணவு பொருள் பொட்டலங்களில் எந்த தேதிக்கு முன்னதாக பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்ப டுத்தக் கூடிய இறுதி தேதியை லேபிள்களில் குறிப்பிட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘‘2011ம் ஆண்டு பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பொருட்களுக்கான சட்டத்தில் இந்த புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் சவுத்ரி லோக்சபாவில் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

‘‘மனிதர்கள் சாப்பிடுவதால் தீங்கு ஏற்படும் பொட்டல உணவு பொருட்களை எந்த தேதிக்கு முன்னதாக பயன்படுத்த வேண்டும் அல்லத பயன்படுத்த வேண்டிய இறுதி தேதி, ஆண்டு, மாதத்தை லேபிளில் குறிப்பிட வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கை கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தொழிற்சாலைகள் விருப்பத்தின் பேரிலோ அல்லது அவசியம் ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு பொருள் தரம் மற்றும் அளவு ஆகியவற்றை உறுதி செய்து கொள்வதற்காக இந்த திட்டம் வழங்கப்படுகிறது’’ என்று சவுத்ரி தெரிவித்தார்.

‘‘இ.வணிகம் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பாளர் பெயர், முகவரி, பேக்கிங் செய்பவரின் விபரம், இறக்குமதியாளர் விபரம், பொருளின் பெயர், மொத்த அளவு, எம்ஆர்பி, நுகர்வோர் பாதுகாப்பு விபரங்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அதேபோல் பொருட்களின் பேக்கிங்கில் குறிப்பிடப்படும் எண்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’’ என்றார் அமைச்சர் சவுத்ரி.