1
குற்றாலம் சீசன் ஆரம்பித்துவிட்டது. ஐந்து அருவிகளிலும் தண்ணீர் கொட்ட, சுற்றுலா பயணிகள்  குளித்து குளித்து… மீண்டும் குளிக்கிறார்கள்.
குற்றாலம் பற்றி தெரிந்துகொள்வோமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள  குற்றால அருவிகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால்   தண்ணீர் கொட்டும். மழையைப் பொறுத்து குற்றால சீசன் கொஞ்சம் முன் பின் ஆரம்பிக்கும். விசாரித்துக்கொண்டு வருவது நல்லது.
சீசன் நேரத்தில்,மிதமான வெப்பம், குளிர் காற்று ,மெல்லிய தூறல் என்று சொர்க்கமாகவே இருக்கும் குற்றாலம்!
நேரங்களில் கன மழை நேரங்களில் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால் மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்கபடுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குற்றாலத்தில் பேரருவி ,சிற்றருவி ,செண்பகாதேவி அருவி ,தேனருவி, ஐந்தருவி ,பழத்தோட்ட அருவி ,பழைய குற்றாலம், புலி அருவி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று நிறைய அருவிகள் உண்டு.
2
அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்:
1) தெற்குமலை எஸ்டேட் – தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.
2) ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ள படகு சவாரி.
3) பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை
4) பூங்காக்கள்.
download
குற்றாலத்தின் சிறப்புகள்:
1) குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்ல, தெய்வீகமான இடமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரசபை, இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளன.
2) தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனது குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளார்.
3) மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் இந்து சமய பாரம்பரியபடி சங்கு வடிவம் உள்ளது சிறப்பு.
bb
குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்:
1) பேரருவியில் உள்ள திருகுற்றாலனாதர் கோவில்.சித்திரை மாதம் முழு நிலவின் போது பத்து நாள் சிறப்பு பிரார்த்தனை இங்கு நடைபெறும்.
2) பண்பொழியில் உள்ள திருமலைக்கோவில் – குற்றாலத்திலிருந்து இருந்து 8 கிமீ.
3) இலஞ்சியில் உள்ள குமரன்கோவில், குற்றாலத்திலிருந்து 1 கிமீ.
4) தென்காசியில் உள்ள காசி விசுவநாதர் கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 6 கிமீ.
5) புளியரையில் உள்ள தக்ஷினாமூர்த்தி கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 12 கிமீ.
6) பாபநாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.
7) ஆரியன்காவு அய்யப்பன்கோவில், குற்றாலத்திலிருந்து 35 கிமீ.
cc
அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள்:
1) பாலருவி – கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.
2) பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறு, குற்றாலத்திலிருந்து இருந்து 35 கிமீ.
3) அகஸ்தியர் அருவி – பாபநாசம் அருகே உள்ளது.
4) பாணத்தீர்த்தம் அருவி – பாபநாசம் அருகே உள்ளது.
5) பாபநாசம் (லோயர்) அணை – பாபநாசம் அருகே உள்ளது.
6) பாபநாசம் (உயர்), காரையார் அணை – பாபநாசம் அருகே உள்ளது.
7) சேர்வலார் அணை – பாபநாசம் அருகே உள்ளது.
8) மணிமுத்தாறு அணை – பாபநாசம் அருகே உள்ளது.
9) களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் – பாபநாசம் அருகே உள்ளது.
10) மஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட் – பாபநாசம் அருகே உள்ளது. இவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடி வரை அமைந்துள்ளன.
குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தாலும் கவலைபடாமல் ஐந்தருவி வாங்க நிச்சயம் தண்ணீர் வரத்து இருக்கும்
dd
ஒரு வேண்டுகோள் 
இங்க சோப்பு ,ஷாம்பு ,இப்படின்னு எதையும் தேய்த்து குளிக்க வேண்டாம், மேலும் பழைய துணிகளை ஆங்கே வீசி எறியவேண்டாம், மேலும் பெண்கள் நாப்கின்களை ஆங்கே போட்டு விடுகின்றனர் இது முகம் சுளிக்கும் படி ஆகிறது அதற்கென உள்ள குப்பை தொட்டிகளில் போட்டு விடுங்கள் ,மேலும் அப்பப்ப இங்கேயும் திருட்டு நடக்கும் அதற்கு நீங்க சந்தர்ப்பம் அமைத்து கொடுக்காதீர்கள்.
6
இங்க சில அரிய வகை பழங்கள் கிடைக்கும் வங்கி  உண்டு மகிழுங்கள்.  அப்புறமென்ன இனி சீசன் ஆரம்பம்தான்..  வாங்க !