அமெரிக்காவின் பிரபல சிரிப்பு நடிகர் சார்லி மர்பி மரணம் –  கவலையில் ஹாலிவுட் 

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி மர்பி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு 57 வயதாகிறது.

நியூயார்க் நகரில் இருக்கும் பிரபல மருத்துவ மனையில் புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சைப் பலனின்றி நேற்றுக் காலமானார்.

Are We There Yet, The Boondocks, and Black Jesus உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் சார்லி மர்பி நடித்திருக்கிறார்.

இவரது தம்பி எட்டிமர்பி தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்கள், இசை நிகழ்ச்சி என பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.