ஸ்டாண்ட் அப் காமெடியன் மஞ்சுநாத் நாயுடு மேடை நிகழ்ச்சியில் மரணம்…..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 36 வயதுடைய ‘மேங்கோ’ என்கிற மஞ்சுநாத் நாயுடு துபாயில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த கமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மறைந்த தனது பெற்றோரின் கதைகளை கூறி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து ‘கவலையால் ஏற்படும் மனஅழுத்தம்’ பற்றி பாவனையுடன் நகைச்சுவையாக பேசிய அவர், திடீரென மேடையிலிருந்த இருக்கையில் அமர்ந்து மயங்கி கீழே விழுந்தார்.

வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் அவரது நண்பர் ஒருவர் மஞ்சுநாத்தை எழுப்பியுள்ளார். ஆனால் அவள் எழுந்திரிக்கவே இல்லை. இதையடுத்து, மருத்துவரை சிகிச்சைக்கு வளைத்துள்ளனர்.

ஆனால், அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.