நாய்க்கு, பின்னணி குரல் கொடுத்த சூரி..

--

 

ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கும் புதிய திரைப்படமான’’ அன்புள்ள கில்லி’’ என்ற படத்தில் பிரதான வேடத்தில் நாய் ஒன்று நடிக்கிறது.

இந்த படத்தில் நாய் பேசும் வசனங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க பல நடிகர்களை ஸ்ரீ நாத் அணுகி உள்ளார்.

‘’நாய்க்கு பின்னணி குரலா?’’ என பலர் பின் வாங்கி விட்டனர்.

கடைசியாக இயக்குநர் ஸ்ரீநாத், நடிகர் சூரியை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார்.
சூரி, நாய் சம்மந்தப்பட்ட காட்சிகளை பார்த்து விட்டு, பின்னணி குரல் கொடுக்க ஒப்புக்கொண்டு, குரலும் கொடுத்துள்ளார்.

‘’லயன் கிங் திரைப்படத்தில், மிருகங்களுக்கு பிரபல நடிகர்கள் தானே பின்னணி குரல் கொடுத்தனர்,. அப்படி இருக்கும் போது நாய்க்கு பின்னணி குரல் கொடுப்பதில் எனக்கு தயக்கம் இல்லை’’ என்று இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கத்திடம் தெரிவித்துள்ளார், சூரி.

-பா.பாரதி.