காமெடியனிடமிருந்து வசனத்தை உருவிய விஜய்

மீபத்தில் நடந்த “பிகைன்ஸ்ட் வுட்ஸ்” தங்கப்பதக்கம் விருது வழங்கும் விழாவில் 1996 முதல் தென்னிந்திய சினிமாவில் அதிக ஹிட் கொடுத்ததற்காக நடிகர் விஜய்க்கு  “தென்னிந்திய சினிமா சாம்ராட்” என்ற விருது வழங்கப்பட்டது.

அப்போது விவசாயிகள் நிலை குறித்து விஜய் பேசியதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. விஜய் ரசிகர் அல்லாதவர்களும் அவரது பேச்சை கேட்டு நெகிழ்ந்தனர்.

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியான “கலக்கப்போவதுயாரு” நிகழ்ச்சியில் ஏற்கெனவே காமெடியன் ஒருவர் பேசியதைத்தான் அப்படியே காப்பி அடித்து விஜய் பேசிவிட்டார் என்று ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது.

அது மட்டுமல்ல.. அந்த காமெடியன் பேசியதையும், விஜய் பேசியதையும் வீடியோக்களாக இணைத்து சமூகவலைதளங்களில் சிலர் பரவவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.