ந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கடந்த வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அமிதாப். ஐஸ்வர்யாராய். ஆராத்யா குணம் அடைந்து வீடு திரும்பினர். அபிஷேக் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தில் ஹீரோவாக நடித்தவர் கருணாஸ், இவர் அஜீத், தனுஷ் உள்ளிட்ட பிரபல ஹீரோக்கள் படங்களில் காமெடி குணசித்ர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்து சூர்யா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் சூரரைப்போற்று படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
கருணாஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக் கிறது. இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னாதாக சில தினங்களுக்கு முன் நடிகர் விஷால், நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தனர். நேற்று பின்னணி பாடகர் எஸ்,பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந் திருக்கிறார்.
முன்னதாக பாகுபலி இயக்குனர் ராஜமவுலி, இயக் குனர் தேஜா ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.