சென்னை :

திரைப்பட நகைச்சுவை நடிகர் நீலு உடல் நலக்குறைவால் காலமானார்.

இவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகம், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ராமய்யா நீலகண்டன் என்ற இவர் நீலு என்று அனைவராலும் அழைக்கப்பட்டார.

81 வயதான இவர் இன்று மதியம் 2:30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை மறுநாள் (12ம் தேதி) பெசன்ட்நகர் சுடுகாட்டில் நடைபெறுகிறது.