வைரலாகும் சதீஷின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம்…!

ஜெர்ரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சதீஷ், ஆர்யா நடிப்பில் வந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் பிரபலமானார்.

அதற்கு முன்பு 8 வருடங்களாக கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியவர்.

இந்த நிலையில், சதீஷ் திருமண நிச்சயதார்த்தம் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால், திருமணம் எப்போது என்ற தகவல் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.