இரட்டை குழந்தைகளுக்கு ‘தாத்தா’வானார் நகைச்சுவை நடிகர் வடிவேலு

டிகர் வடிவேலு இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவரது மகள் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு தாத்தாவானார்.

நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருபவர் நடிகர் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன்,  போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்த வடிவேலு, அரசியல் பிரவேசம் மேற்கொண்டதால், சினிமா வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில்,  கடடந்த சில வருடங்களுக்கு முன் மதுரையில் தனது மகள் திருமணத்தை எளிமையாக நடத்தினார். தற்போது அவரது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஒரு ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது.

இதன் காரணமாக வடிவேலு தாத்தாவாக பதவி உயர்வு பெற்றுள்ளார். பேரப்பிள்ளைகள் பிறந்த  மகிழ்ச்சியை கொண்டாடும்விதமாக சொந்த ஊரில்  உறவினர்களுக்கு வைத்து அசத்தி உள்ளார்.