ரஜினியை தொடர்ந்து 3டி படத்தில் நடிக்கும் யோகி பாபு

ரஜினியை அடுத்து 3டி படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக யோகி பாபு மாறி வருகிறார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

yogi

தற்போது விஜய் உடன் சர்கார், அஜித் உடன் விஸ்வாசம் என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் டார்லிங் பட இயக்குநர் சாம் ஆண்டனின் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

அதில் கூர்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால், படத்திற்கு ’கூர்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் ஒன்றில் யோகி பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ’மஞ்சப்பை’ பட இயக்குநர் ராகவன் இயக்க உள்ளார். ரஜினியின் ’2.0’ படம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கடுத்து முழுவதும் 3டியில் உருவாகும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை யோகி பாபு பெற்றுள்ளார். இதில் அவர் வேதாளமாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.