Random image

மூத்த நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் காலமானார்

கோவை:

கைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் கோவை செந்தில் (வயது 74) உடல்நலக்குறைவால் காலமானார்.

பல்வேறு திரைப்படங்களில் படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபல மானவர் கோவை செந்தில். இவர் கே பாக்யராஜின் பாசறையை சேர்ந்தவர். சமீப காலமாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்j நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.  அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர் பாக்யராஜின் , இது நம்ம ஆளு, படையப்பா, கோவா உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளளார். மேலும்,  பாக்யராஜ் மற்றும் விக்ரமன் இயக்கத்தில் அதிகளவில் நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி காமென்யென்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செந்தில் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.