தூத்துக்குடி:

போலீசாரின் மிருகவெறி துப்பாக்கி சூட்டுக்கு பலியான மற்றும் காயமடைந்தவர்களை சந்திக்க தூத்துக்குடி வந்த கமலஹாசன்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நேற்று போராட்டக்காரர்கள்மீது போலீசார் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சீருடை அணியாமல், மப்டி உடையுடன் போலீஸ் வாகனத்தின்மீது ஏறி நின்று, மனிதாபிமானமற்ற முறையில் போராட்டக்கார்களின் நெஞ்சிலும், முகத்திலும், தலையிலும் துப்பாக்கி சூடு நடத்திய நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்,  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது  தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.