நெட்டிசன்:

ராஜூ மாரியப்பன் ( Raju Mariappan) அவர்களின் முகநூல் பதிவு:
·
90களின் தொடக்கம் வரை பெண்கள் தினம் என்ற வணிக அரசியல் இருந்ததில்லை. இந்திய பெண்கள் சிக்கனத்துக்கு உதாரணமாக இருந்தார்கள், வணிகச் சந்தை மொத்தமும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. தனக்கு என்ன பொருள் தேவை, அதை எவ்வளவு வாங்க வேண்டும், அதை எதில் வாங்க வேண்டும் என்பதைக் கூட அவர்கள் சுயமாக முடிவெடுத்து செயல்பட்டார்கள்.

90களில் வரிசையாக சில அழகிப் பட்டங்களும் மகளிர் தினம் என்ற வார்த்தை ஜாலங்களும் அவர்கள் முன்னாள் தூவப்படடன. பெண்கள் என்றாலே பொருட்களை வாங்கிக் குவிக்கவே பிறந்தவர்கள் என்ற பிம்பம் கடடமைக்கப்பட்ட்து. அவர்களும் சடடென்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டு தம்மை சந்தையின் கட்டுப்பாட்டுக்குள் ஒப்புக்கொடுத்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு எந்த அழகியும் இந்த நாட்டில் இருந்து தேர்வாகவில்லை. ஆனால் உண்மையான தேவை இருக்கிறதா எனத் தெரியாமலே வாங்கிக் குவிக்கப்பட்ட பொருட்களால் உருவான குப்பை மலைகள் மட்டும் பல குளங்களைக் காணாமலே போகச் செய்து விட்டன.