பஸ் ஊழியர் சங்கங்கள் கோரிக்கை மனு அளிக்க ஆணையம் உத்ரரவு

சென்னை:

ஊதிய உயர்வு கோரி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இந்த ஆணையம் இன்று கூடியது. அப்போது, ‘‘13-வது ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒரு வாரத்தில் தங்களது கோரிக்கை மனுவை அளிக்க வேண்டும்’’ என்று ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.