இந்து அறநிலையத்துறை ஆணையர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை:

மிழக இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக இருந்து வந்த டி.கே. ராமச்சந்திரன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆணையராக பனீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக கோவில்களில் நடைபெற்று வரும் சிலை திருட்டு மற்றும் சிலை மாற்றங்களுக்கு தமிழக அறநிலையத்துறை மீதும் குற்றம் சாட்டப்பபட்டு வருகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை இணைய ஆணையர் திருமகள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அறநிலையத்துறையின் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். அறநிலையத் துறையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சென்னை உயர்நீதி மன்றம் அமைத்துள்ள ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை தமிழக அரசு மாற்ற உத்தரவு பிறபித்தது. அதன்படி அறநிலையத்துறை ஆணையர் மற்றும் செயலாளராக பனீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.

மேலும் ஏற்கனவே ‌ஆணையராக இருந்த டி.கே.ராமச்சந்திரன், தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தலைவராக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்ததுள்ளது.