சென்னை,

டுத்த கல்வி ஆண்டு முதல்  பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இந்தியா முழுவதும் மருத்துவக்கல்விக்கான பொதுநுழைவுத் தேர்வு (நீட்) இந்த ஆண்டு முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்விக்கும் பொதுநுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அறிவித்திருந்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது,

, “தமிழக அரசு, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடந்தால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, நுழைவுத்தேர்வு நடந்தால், அதிகப் பயிற்சி மையங்கள் உருவாகும் என்று புகார் எழுந்துள்ளது. இதனால், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.