2021ம் ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத்தேர்வு! உயர்கல்வி செயலாளர் அமித் கரே

டெல்லி: 2021 முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.  இதை உயர்கல்விச் செயலாளர் அமித்கரேவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 15 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தேசிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய கல்விக்கொள்கை தொடர்பாக அரசு அமைத்துள்ள கமிட்டியின் பரிந்துரைப்பட இந்த நுழைவுத் தேர்வுகள் வரும் கல்வி ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் குறித்து ஆராயாமல், பொதுத்நுழைவுத்தேர்வு மூலம்  மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை  மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பாக  ஏழு பேர் கொண்ட குழுவை மத்தியஅரசு  அமைத்துள்ளது. இந்த குழுவினரின் பரிந்துரைப்படி   2021-22 கல்வி ஆண்டில் இருந்து, மத்திய பல்கலைக்கழகங்களிலும் பொதுநுழைவுத்தேர்வு சேர்க்கை கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.    தேர்வானது கணினி அடிப்படையிலான  தேர்வு என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த நுழைவுத்தேர்வு, தேசிய சோதனை நிறுவனத்தால் (என்.டி.ஏ) நடத்தப்பட உள்ளது,

இதுகுறித்து கூறிய  உயர்கல்வி செயலாளர் அமித் கரே, பொதுநுழைவுத் தேர்வானது, உயர்தர திறனாய்வு சோதனை யாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

தேசிய கல்வி கொள்கை, 2020ன் படி, “ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு முறையாவது உயர்தர பொதுவான திறனாய்வு சோதனையையும், அறிவியல், மனிதநேயம், மொழிகள், கலைகள் மற்றும் தொழில் பாடங்களில் சிறப்பு பொதுவான பாடத் தேர்வுகளை நடத்த என்டிஏ முடிவு செய்துள்ளதாகவும்,

இந்தத் தேர்வுகள் கருத்தியல் புரிதலைச் சோதிக்கும் … மாணவர்கள் தேர்வைப் பெறுவதற்கான பாடங்களைத் தேர்வுசெய்ய முடியும், மேலும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட பாடத் துறையைப் பார்க்கவும், தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் மாணவர்களை அவர்களின் திட்டங்களில் சேர்க்கவும் முடியும்  என்றவர், அதே வேளையில், 2021-22 அமர்வுக்கு ஒரு முறை மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படும் என்று கரே கூறினார்.

ஏழு பேர் கொண்ட குழுவுக்கு பத்திந்தா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர் பி திவாரி தலைமை தாங்குவார். மற்ற உறுப்பினர்களில் டியூவின் வி.சி.க்கள், தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகம், மிசோரம் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், என்.டி.ஏ இயக்குநர் ஜெனரல் மற்றும் மோ.இ.யின் இணை செயலாளர் (மத்திய பல்கலைக்கழகங்கள்) ஆகியோர் அடங்குவர்.

ஏழு பேர் கொண்ட குழுவின்  முழு அளவிலான பரிந்துரைகள் இன்னும் ஒரு மாதத்திற்குள்  சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பதாக யுஜிசி தலைவர் பேராசிரியர் டி பி சிங் தெரிவித்தார்.

மத்தியஅரசின் பல்கலைக்கழகங்களுக்கு நடத்தப்பட நுழைவு தேர்வானது, ஒரு பாடநெறிக்கு மாணாக்கர்கள்  “தகுதியுடன்” சேர வாய்ப்பளிப்பதாக இருக்கும், பொதுநுழைவுத் தேர்வுக்கு   நிர்ணயிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தகுதி மாணவர்களின் சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள் என்பதை உறுதி செய்யும் என்றவர்,  60% மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் கூட பொதுவான நுழைவுத் தேர்வு எழுதி  சேர்க்கைக்கு தகுதி பெற முடியும் என்று தெரிவித்து உள்ளார்.