காமன்வெல்த்: இந்திய குத்துச்சண்டை வீரம் தங்கம் வென்றார்

கோல்டு கோஸ்ட்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது.

ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தங்கப்பதக்கம் வென்றார்.

கேமரூன் வீரரை தோற்கடித்தார். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 25வது தங்கப்பதக்கமாகும். இதுவரை இந்தியா 25 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.