காமன்வெல்த் 2018: 2 இந்திய தடகள வீரர்கள் வெளியேற்றம்


கோல்டுகோஸ்டு :

காமன்வெல்த் போட்டியில் இருந்து 2 இந்திய தடகள வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கோலோதும் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதால் விளையாட்டு நடைபெறும் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடைபெற்ற சோதனையின்போது,  உடலில் ஊக்க மருந்து ஏற்ற பயன்படும் ஊசி வைத்திருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.