காமன்வெல்த் 2018: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் மணிஷ் கவுஷிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்

குத்துச்சண்டை:  மணிஷ் கவுஷிக் – வெள்ளி

கோல்டு கோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஹாரி கார்சைட் இடம் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

இன்று நடைபெற்ற  குத்துச்சண்டை போட்டிகளில்  இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி, மோரிகோம் தங்கம் வென்றுள்ளனர். மற்றொரு போட்டியில் இந்திய வீரர்  அமித்  வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில் தற்போது இந்திய வீரர் மணிஷ் கவுஷிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதன்மூலம், இந்தியா 20 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.