கோல்ட்கோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்றும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள்  பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஹாக்கி போட்டிகளில் இந்திய ஆடவர் அணி மற்றும் பெண்கள் அணி சிறப்பாக விளையாடி அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளனர். இதன் காரணமாக இந்தியாவுக்கு பதங்கங்கள் கிடைப்பது உறுதியா உள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன.   இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

ஏற்கனவே பளு தூக்குதல், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன்  நடைபெற்ற போட்டியில்  2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 3வது ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,  பெனால்டி கார்னருக்கு புகழ்பெற்ற வீரரான  ஹர்மன்பீரித் சிங் 3 மற்றும் 44 வது நிமிடங்களில் கோலடித்து அசத்தினார். இந்த போட்டியில்  மலேசியாவை வென்றதின் மூலம் இந்திய ஆடவர் அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அடுத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர்  இங்கிலாந்துடன் மோ உள்ளனர்.

அதேவேளையில், மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. கேப்டன் ராணி ராம்பால் ஓரே கோலை அடித்தார்.  இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது