காமன்வெல்த் 2018: 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தமிழகவீரர் சதீஷ் தங்கம் வென்றார்

கோல்டுகோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் 77கி பளுதூக்கும் பிரிவில் தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஆடவர் 77கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட தமிழக வீரர் சதீஸ்குமார், முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.

71 நாடுகள் பங்கேற்கும் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்டில் கடந்த 4ந்தேதிமுதல் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றிருந்த நிலையில், தற்போது தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றதை தொடர்ந்து 3 தங்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

41 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா  முதலிடத்திலும், 23 பதக்கங்களை பெற்று இங்கிலாந்து 2வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு பெருமை சேர்ததுள்ள  தங்கத் தமிழனை வாழ்த்துவோம் .