துப்பாக்கிச் சுடுதலில் ஷ்ரேயாசி சிங் தங்கம் வென்றதன் மூலம், காமன் வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 23ஆக உயர்ந்தது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2018ல் மகளிருக்கான டபுள் டிராப் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் ஷ்ரேயாசி சிங் கலந்து கொண்டார்.

ஷ்ரேயாசி 24,25, 22, 25 என மொத்தம் 96 புள்ளிகள் பெற்று, ஆஸ்திரேலியாவின் எம்மா காஸை இரண்டாமிடத்துக்கு  தள்ளினார்.

இரண்டு சுற்றுகளின் முடிவில் ஷ்ரேயாசி மற்றும் பியர்சன் தலா 49 புள்ளிகள் பெற்றனர். அப்போது 46 புள்ளிகளுடன் வர்ஷா 3ஆம் இடத்தில் இருந்தார். அடுத்த சுற்றில் 22 புள்ளிகள் பெற்று, 2வது இடத்திற்கு ஷ்ரேயாசி சென்றார்.

ஆனால் 21 புள்ளிகள் பெற்று, வர்ஷா 3வது இடத்தில் தொடர்ந்து தக்க வைத்திருந்தார். கடைசி சுற்றில் சிறப்பாக விளையாடி, 25 புள்ளிகள் பெற்று அனைத்துப் போட்டியாளர்களையும் வென்றார்.

இதனால் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியானது. ஒருசமயம் காஸுடன் 96 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு சில புள்ளிகளில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டு, ஆஸ்திரேலியாவின் காஸ் இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கேம்பிரிட்ஜில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்று வரும் வர்ஷா, மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டு, நான்காம் இடம் பிடித்தார்.

இதன்மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை ஷ்ரேயாசி சிங் பெற்றுத் தந்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியா, ஒட்டுமொத்தமாக 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் உட்பட 24 பதக்கங்களுடன், காமன்வெல்த் 2018 பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது