உத்தரபிரதேசம்: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கணை மீது தாக்குதல்

வாரனாசி:

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கணை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். இவர் உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி அருகே உள்ள கிராமத்தில் உறவினரை பார்க்க சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கல், செங்கலை கொண்டு தாக்கினர்.

அவரது தந்தை, மாமா தடுக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அவர்களையும் தாக்கிவிட்டு ஓடிவிட்டது. தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பூனம் யாதவை மீட்டனர். பூனம் யாதவ் குடும்பத்தாருக்கும், அவரது உறவினர் குடும்பத்துக்கும் இடையே நிலப் பிரச்னை உள்ளது. இதன் காரணமாக தான் பூனம் தாக்கப்பட்டுள்ளார் என்று மாவட்ட போலீஸ் எஸ்பி அமித்குமார் தெரிவித்தார்.