காமன்வெல்த் 2018: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை தேஜ்ஸ்வினி சவந்த் தங்கம்

கோல்டுகோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இன்று 9வது நாளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவந்த் தங்கம் வென்றுள்ளார்.

அதுபோல, அர்ஜும் முட்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

இதுவரை இந்தியா 15 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை பெற்று 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.