டெல்லியில் வகுப்புவாத கலவரம்: மோடி அரசு கவலை

டெல்லி:

துவரை நடந்த கலவரங்கள் டெல்லியையே உலுக்கியதோடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வருகையை நன்மையளிக்கும் வகையில் இருந்த போதும், மோடி அரசாங்கம் கவலை அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. போலீசார் தங்கள் கடமைகளை முறையாக ஆற்றி வருகின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லியில் போலீஸாரின் தீவிர முயற்சிகளை மீறி நிலைமை கட்டுக்கடங்காமல் போவதாக செய்திகள் வெளியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அழைத்து. நிலைமையை சீர் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி செவ்வாயன்று இரவு உத்தரவிட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தன்னிடம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொண்டார் என அஜித் டோவல் தெரிவித்தார்.

கடந்த செவ்வாயன்று இரவு கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் சுற்றிப் பார்த்த அஜித் டோவல் உடனடியாக டெல்லி போலீஸ் அதிகாரிகளுக்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். உடனடியாக சிறப்பு உதவிக் கமிஷனராக ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டார். அவரும் அஜித் டோவலுடன் சேர்ந்து கடந்த புதன்கிழமையன்றும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார் .டெல்லியில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் டெல்லி உயர் அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர், ராஜ்நாத் சிங், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் டில்லி நிலைமை குறித்த மதிப்பீட்டை அஜித் டோவல் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவரது நடவடிக்கைகளுக்கு அக் கமிட்டி அனுமதி வழங்கியது.டெல்லியில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளை அஜித் தோவல் இரண்டாவது முறையாக புதன் கிழமை சுற்றிப்பார்த்தார். புதன்கிழமை பிற்பகல் இரண்டாவது முறை டெல்லி போலீஸ் அதிகாரிகளுடன் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். இப்பொழுது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது மக்கள் போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து திருப்தியோடு இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான ஏஜென்சிகளின் நடவடிக்கை குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது .போலீசார் தங்கள் கடமைகளை செய்து வருகிறார்கள். அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று செய்தியாளர்களிடம் அஜித் தகவல் தெரிவித்தார். போலீசார் மிகவும் கடினமாக கடந்த சில நாட்களாக உழைத்து வருகிறார்கள் .

டெல்லியில் சட்டவிரோத அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சில கிரிமினல்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாகமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதேநேரத்தில் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காணப்படவேண்டும். முன்பு வன்முறை சம்பவங்கள் இங்குமங்குமாகநடந்தன .ஆனால் இன்று அந்த சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எல்லா இடத்திலும் அமைதி நிலவுகிறது. உள்ளூர் பகுதிகளில் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

டெல்லியில் முழு அமைதி திரும்பியது என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என அஜித் டோவல் கூறினார்.

செய்தியாளர் கூட்டம் முடிந்ததும் வன்முறைச்சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்த ஜாப்ராபாத் பகுதிக்கு உயரதிகாரிகளுடன் சென்றார். அங்கு அப்பகுதி மக்களிடம் அவர்பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு இளம்பெண் நேரில் அவரிடம் வந்து தழுதழுத்த குரலில் கூறினார்.

இங்கு அமைதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை. கலவரக்காரர்கள் இங்கு வெறியாட்டம் ஆடிய பொழுது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இங்கு அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள் .என்று அந்த இளம்பெண் குறிப்பிட்டார் .அப்பொழுது அஜித் டோவல் எந்த தயக்கமும் இன்றி உடனடியாக உறுதி வழங்கினார். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் . இங்கு எல்லாம் அமைதியாக இருக்கும். உடனே அவர் தன் அருகில் இருந்த போலீசார் அழைத்து இந்த இளம்பெண் தன் வீட்டுக்கு பாதுகாப்பாக திரும்பச் செல்லவேண்டும். அவருடன் செல்லுங்கள் என்று கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசும்போது மக்கள் மத்தியில் ஒற்றுமை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மக்கள் மத்தியில் ஒருவர் மீது மற்றவருக்கு வெறுப்போ விரோதமோ இல்லை. சில குற்றவாளிகள் தான் இந்த வன்முறைச் செயல்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். அவர்களை மக்கள் தனிமைப் படுத்தி வருகிறார்கள். போலீசார் இங்கு தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்து வருகிறார்கள் என்று அஜித் டோவல் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திரமோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரின் கட்டளைப்படி தான் நடந்துகொள்வதாக அஜித் டோவல் கூறினார்.

அமித் ஷாவின் ‘அமைதியான ஆய்வு’

கவலையின் மற்றொரு அறிகுறி, அமித் ஷாவின் அமைதியான ஆய்வு. அவர் உள்துறை அமைச்சராக மேற்பார்வையிடும் டெல்லி காவல்துறையின் மகத்தான திறமையின்மை மற்றும் உடந்தையாக இருப்பதற்கான ஆதாரங்களின் ஆராய்ந்து வருகிறார். கவனமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு பின்னால் அமித் ஷா டெல்லி வன்முறை கட்டுபடுத்தப்பட்டு விட்டதாகவும், டோவல் அவருடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படுகிறார் என்றும் கூறினார். இருந்த போதும் சிக்கலான நேரங்களில் அமித் ஷா காணமல் போய்விடுது வழக்கமாகவே இருந்து வருகிறது.

இதை ஷா என்றென்றும் மறைக்க முடியாது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. அவர் எப்போது வெளியே வருவார்? டெல்லி கலவரம் குறித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிடுவாரா? அவர் என்ன சொல்வார்? இந்த கேள்விகளுக்கான பதில்கள் அரசாங்க சிந்தனை, அதன் எதிர்கால மூலோபாயம் மற்றும் அவர் வழிநடத்திய டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற இரட்டை வெற்றிகள் மற்றும் வன்முறையின் போது தலைநகரில் காவல்துறையின் மொத்த சரிவுக்கு பின்னர் ஷாவின் சொந்த நிலைப்பாட்டின் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

அரசாங்கம் ஏன் கவலைப்பட வேண்டும்?

அரசாங்கம் கவலைப்பட பல காரணங்கள் உள்ளன. இந்த வன்முறை சம்பவம் நாட்டின் இமேஜ்ஜை கெடுப்பதும், மந்தமான பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இது மிகவும் தேவைப்படும் அந்நிய முதலீட்டை தடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்ப்டுகிறது. டிரம்ப் வருகையை மறைக்க உலக ஊடகங்களில் பெரும்பாலானவை டெல்லியில் இருந்தன. எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதியையும் உலகின் பிற பகுதிகளையும் கவர்ந்திழுக்க மோடி முன்வைத்த ஆடம்பரமான மற்றும் நிகழ்ச்சிக்கு பதிலாக, டெல்லியின் வகுப்புவாத கலவரங்கள் கவனத்தை ஈர்த்தன.

சில மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டது போன்று, ட்ரம்ப் பயணம் செய்த இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், தலைநகரின் மையத்தில் கலவரங்களுடன் சமூக ஸ்திரமின்மை மற்றும் அராஜகத்திற்குள் மூழ்கியன என்பது உண்மையே என்று தெரிகிறது.

பிரதமர் மோடி வருத்தம்?

முன்னதாக புதன்கிழமை அன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டார். டெல்லியில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போலீசார் தங்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர். உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பணிக்கப்பட்டுள்ளனர். மக்கள் டெல்லியில் அமைதி நிலவ உதவ வேண்டும் என பிரதமர் மோடி டுவிட்டரில் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத் தகுந்தது.

கார்ட்டூன் கேலரி