Random image

கேரளாவில் கம்யூனிஸ்ட் – பாஜக தொண்டர்கள் மோதல்….திடீர் பதற்றம்

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க. தொண்டர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் சம்பவம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மே மாதத்தில் இரு கட்சிகளின் தொண்டர்கள் அடுத்தடுத்து ஒரே நாளில் கொல்லப்பட்டனர்,

இந்நிலையில், கண்னூர் மாவட்டத்தில் இன்று காரில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை மோட்டார் சைக்கிள்களில் வந்த பா.ஜ.க. தொண்டர்கள் வழிமறித்து தாக்கினர். இதில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 பேரும், பா.ஜ.க.வினர் 3 பேரும் காயமடைந்தனர். இவர்கள் மாட்டானூர் மற்றும் தலச்சேரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.