சென்னை:

ம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், நல்லகண்ணுவுக்கு இன்ற  95வது பிறந்தநாள். இதையொட்டி, அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,  95 வயதிலும் தொய்வில்லாப் போராளி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இரா.நல்லகண்ணு இன்று தன்னுடைய 95-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தனது தள்ளாத வயதிலும், மக்கள் நலப்பிரச்சினையில் அக்கறை காட்டும் நல்லக்கண்ணு, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நலன்களுக்கு எதிரான போராட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், . அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், நல்லகண்ணுவின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அங்கு வாழ்த்திய பேசிய மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் பேரணி என்பதால் 8,000 பேர் தான் பங்கேற்றதாக எண்ணிக்கையை குறைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எவ்வளவு வழக்கு போட்டாலும் சந்திப்போம். குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும். உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்களை இணைத்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

நல்லக்கண்ணு பிறந்தநாளை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.

அதில், “பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம் முன் வாழ்கிறாரே நல்லகண்ணுவைப் போல இருக்கும்! மார்க்சியத் தத்துவத்தின் மனித உருவம் அவர்.

95 வயதிலும் தொய்வில்லாப் போராளி; இடைவிடாத உழைப்பாளி; தூய்மையான சிந்தனையாளர். நல்ல கண்ணுவை வணங்குகிறேன்; இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து மக்களுக்கு உணர்ச்சி யூட்டுங்கள்! உற்சாகமும் ஊக்கமும் தாருங்கள்! என்று அவரைப் பணிவன்புடன் வேண்டுகிறேன். திமுகவின் சார்பில், நல்லகண்ணுவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்” என  தெரிவித்து உள்ளார்.