டில்லி:

மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி சார்பாக  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாராளுமன்ற செயலிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  மல்லிகார்ஜுன் கார்கே, லோக்சபா செகரட்டரியிடம்  மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார்.

அதுபோல ஒஎய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர், மத்திய பாஜக அரசுமீது  நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, கம்யூனிஸ்டு கட்சியினரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை செயலரிடம் மனு. சிபிஐ எம்.பி. கருணாகரன் இதுகுறித்து லோக்சபா செயலருருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இதில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு மீது 3 கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ள நிலையில்,  பாராளுமன்ற அமளி காரணமாக, அதுகுறித்த விவாதம் எடுத்துக்கொள்ளப்படுவது தவிர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.