இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்!

டில்லி:

ந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு  சிகிச்சைஎடுத்து  வந்த நிலையில்  அவரது உயிர் பிரிந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருதாஸ் தாஸ்குப்தா. இவருக்கு வயது 83. மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர் உள்பட கம்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

வயது முதிர்வு காரணமாக சிறுநீரக கோளாறு மற்றும் இருதய பாதிப்புக்கு ஆளானவர், கடந்த சில மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில்உறுப்பினர்  பதவி உள்பட கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும், மக்களவை, என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இருதயம் மற்றும் சிறுநீர கோளாறால் அவதிப்பட்டு வந்த இவர், தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கொல்கத்தாவில் வசித்து வந்த  இன்று காலை காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.