பெய்ஜிங்: சீனாவைச் சுற்றியுள்ள சமூகங்களில் உள்ள மக்கள், மூன்று வாரங்களுக்குள் 213 பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவக்கூடும என்ற அச்சத்தின் பேரில் செல்லப் பிராணிகளை வைத்திருப்பதை நிறுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள், என்று மெயில்ஆன்லைன் தெரிவிக்கிறது.

இந்தக் கொடிய தொற்று நோயைச் சமாளிக்கும் நோக்கத்தில், குடியிருப்புக் குழுக்கள், கிராம அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் மேலதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்ற பின்னர் உள்ளூர்வாசிகளுக்குக் கடுமையான உத்தரைவைப் பிறப்பித்தன.

ஹெபியில் உள்ள ஒரு கிராமம், அனைத்து வீடுகளையும் ஐந்து நாட்களுக்குள் தங்கள் செல்லப்பிராணிகளை ‘சமாளிக்க‘ வலியுறுத்தியது. இல்லையென்றால், அதிகாரிகள் அவற்றை மொத்தமாகக் ‘கையாள்வார்கள்‘ என்று தெரிவிக்கப்பட்டது.  மெயில்ஆன்லைனுக்க அளிக்கப்பட்ட தகவல்களின்படி, ஷாங்க்சியில் உள்ள மற்றொரு குடியிருப்புக் குழு ‘ஒட்டுமொத்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் செல்லப்பிராணிகளை அப்புறப்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தியது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் முன் செல்லப்பிராணிகளை காட்டினால், அவையும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சீனாவின் தொற்று நோய்களுக்கான உயர் நிபுணர் எச்சரித்ததால், பிராணிகளும் நோயால் பீடிக்கப்படும் என்ற அச்சத்தை அச்செய்தி ஏற்படுத்தியது.

எவ்வாறாயினும், உலக சுகாதார அமைப்பானது, பூனைகள் அல்லது நாய்களுக்கு வைரஸ் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை என்று கூறுகிறது.