டில்லி

ரும் 23 ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டமாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இதில் கடந்த 11 ஆம் தேதி 20 மாநிலங்களின் 91 தொகுதிகளுக்கும், 18 ஆம் தேதி 13 மாநிலங்களின் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 23 ஆம் தேதி அன்று 13 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1)  என மொத்தம் 117 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இதில் கேரளாவில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் ஒன்றாகும். ஏற்கனவே அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவது தென்னிந்திய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த 117 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 21 ஆம் தேதியுடன் இந்த தொகுதிகளில் நிறைவு பெறுகிறது.