கொரோனாவால் கடும் பொருளாதார இழப்பு: வாடகை செலவுகளை குறைக்கும் முன்னணி நிறுவனங்கள்

டெல்லி: கொரோனா பொருளாதார இழப்பால் பல நிறுவனங்கள் வாடகையை மறுபரிசீலனை செய்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்ததால், அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் வாடகைகளை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்து உள்ளன. மேலும் சிறிய இடவசதி கொண்ட அலுவலகங்களுக்கு மாற முனைகின்றன.

அதுதவிர வீட்டிலிருந்து வேலை செய்யவும் ஒப்புக்கொள்ள தொடங்கி இருக்கின்றன. வங்கி சாராத நிதி நிறுவனங்களில் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் பிராந்திய மேலாளர்களை வாடகை ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கிகளில், இண்டஸ்இண்ட் வாடகையில் 25-30 சதவிகிதம் குறைக்க முயற்சிக்கிறது. மத்திய மும்பையில் உள்ள ஒரு முக்கிய வணிக வளாகத்தில் குத்தகைக்கு விடப்பட்ட ஒரு அலுவலக இடத்தை விட்டுவிட முடிவு செய்துள்ளது.

ஆக்சிஸ் வங்கியானது ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வீடுகளில் இருந்து வேலை செய்ய, அதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்க தொடங்க இருக்கிறது.