பொது இடங்களில் தொழுகை நடத்த நொய்டாவில் தடை – அவ்வாறு நடத்தினால் மதநல்லிணக்கம் சீர்குலையுமா என முஸ்லீம் அமைப்புகள் கேள்வி

நொய்டாவில் பொது இடங்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்திரப்பிரதேச மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவிற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

jumma1jpg

உத்திரப்பிரதேச மாநிலம் நெய்டாவில் ஐடி நிறுவனங்கள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகல், கணினி மென்பொருள் , எலக்ட்சிக் மற்றும் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலைகள் என ஏராளமான தொழில்நிறுவனங்கள் உள்ளன.

இவற்றில் வேலைப்பார்க்கும் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு தொழுகையை நிறுவனங்களில் போதய இடவசதி இல்லாத காரணத்தினால் பொது இடங்களில் நடத்தி வந்தனர். தொழிற்பூங்காக்களில் வாரந்தோறும் தொழுகை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பொது இடங்களில் தொழுகை நடத்துவதால் வன்முறை ஏற்படும் என்றும், தங்களுக்கு இடையூறாக உள்ளதாகவும் இந்துதுவ அமைப்புகள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொது இடங்களில் தடையை மீறி தொழுகை நடத்தினால் அதற்கு பணியாற்றும் ஊழியர்களின் நிறுவனமே பொறுப்பு எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்ஹாதுல் முஸ்லிமன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்தள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ” கன்வாரியாஸ் செய்யும் பூஜைக்கு உத்திரப்பிரதேச அரசு மலர் தூவி வரவேற்கிறது. ஆனால் வாரத்துக்கு ஒருமுறை தொழுகை நடத்துவதால் சட்டம் ஒழுங்கு, மதநல்லிணக்கம் சீர்குலையுமா? தொழுகை நடத்துவது தனிநபர்கள் தொடர்புடையது. இதற்கு தனியார் நிறுவனங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி