கமல் கேட்ட சம்பளம் ; அதிர்ச்சியிலிருந்து மீளாத பிக்பாஸ் நிறுவனம்…!

பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி தமிழில் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகியது. இந்த இரண்டு சீசன்களையுமே நடிகர் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சில காரணத்தால் இன்னும் துவக்கப்படாமலே இருக்க பிக் பாஸ் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசனை வைத்தே மூன்றாம் சீசனை தயாரிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்து கமல்ஹாசனின் பேச்சுவார்த்தை நடத்திய போது, மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க சம்மதித்த கமல்ஹாசன், சம்பளமாக ஒரு நாளைக்கு ரூ.1 கோடி வீதம், மொத்தம் 100 நாட்களுக்கு ரூ.100 கோடி கேட்டாராம். அவரது இந்த சம்பள தொகையை கேட்டதும் நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி