டில்லி

டந்த 1974லிருந்து ஒப்பிடும்போது ராம்நாத் கோவிந்த் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார்.

ராம்நாத் பெற்ற வாக்குகளின் மதிப்பு 702044 ஆகும்.  மீரா குமாருக்கு 367314 மதிப்புள்ள வாக்குகள் கிடைத்துள்ளன.  அதாவது 65.65% வாக்குகள் ராம்நாத்துக்கு கிடைத்துள்ளது.  இதை 1974 லிருந்து ஒப்பிட்டுப் பார்ப்போம்.

பிரணாப் முகர்ஜி – 2012 – 69.31%

பிரதீபா பாடில் – 2007 – 65.82% (சற்றே ராம்நாத்தை விட அதிகம்.

அப்துல் கலாம் – 20002 – 89.57%

கே ஆர் நாரயணன் – 1997 – 94.97%

சங்கர் தயாள் சர்மா – 1992 – 65.87%

ஆர். வெங்கடராமன் – 1987 – 72.28%

ஜெயில் சிங் – 1982 – 72.73%

நீலம் சஞ்சீவ ரெட்டி – 1977 –  போட்டியின்ற் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி

கே ஆர் நாராயணனை போல் 90%க்கு மேல் வாக்கு வாங்கியவர்கள் இருவர்.

ராஜேந்திர பிரசாத் – 1957 – 98.99%

ராதாகிருஷ்ணன் – 1962 – 98.24%

இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று வென்றவர் வி வி கிரி – 1969 – 48%

அப்போது காங்கிரஸ் இரண்டு பிரிவாக இருந்ததுடன், மொத்தம் போட்டியிட்டவர்கள் 15 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது