மெட்ரோவில் கூட்டத்தை பொறுத்து அதிக பெட்டிகள் இணைக்கப்படும் : அதிகாரிகள் தகவல்

--

சென்னை

சென்னை மெட்ரோ ரெயிலில் கூட்டம் அதிகமாக உள்ள போது கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்படும் என மெட்ரோ ரெயில் அதிகார் தெரிவித்துளார்.

சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் இணைந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்டினார்கள். அப்போது சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரெயில் அதிகாரிகள், “அண்ணாசாலை டி எம் எஸ் மற்றும் செண்டிரல் வரைஉள்ள மெட்ரோ ரெயில் பாதை வண்ணாரப்பேட்டை வரை நீட்டிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இந்த தண்டவாளத்தில் டீசல் எஞ்சினை பயன்படுத்டி சோதனை நடத்தப்பட்டது. மெட்ரோ ரெயிலை இயக்கி இன்னும் 10 நாட்களில் சோதனை நடத்தப்பட உள்ளது.

மெட்ரோ ரெயில் தற்போது 4 பெட்டிகளுடன் ஒரு முறை பயணிக்கும் போது 16 பேருந்துகள், 200 கார்கள், மற்றும் 600 இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் நெரிசல் குரைகிறது. மேலும் இந்த சேவை வண்ணாரப்பேட்டை வரை நீட்டிக்கும் போது பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே கூட்டம் அதிகரிக்கும் போது மேலும் 2 பேட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதற்கான நடமேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே மெட்ரோ ரெயில்வே நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன. எனவே கூட்டத்தை பொறுத்து பெட்டிகளின் எணிக்கை அதிகரிக்கபடும்” என தெரிவித்துள்ளனர்.