மிர்தசரஸ்

ராக்கில் கொல்லப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பது பற்றி மத்திய அமைச்சர் வி கே சிங் நிவாரணத் தொகை என்பது அனைவருக்கும் அளிக்கும் பிஸ்கட்டுகள் இல்லை என கூறி உள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஐ எஸ் தீவிர வாதிகளால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட 38 பேரின் சடலங்களை மத்திய அமைச்சர் வி கே சிங் நேற்று அமிர்தசரசுக்கு எடுத்து வந்தார்.   கொல்லப்பட்ட 39 பேரின் சடலங்களில் ஒரு சடலம் மரபணு பரிசோதனையில் ஒத்துப் போகாததால் அந்த ஒரு சடலத்தை தவிர மற்ற சடலங்கள் எடுத்து வரப்பட்டன.

இந்நிலையில் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து “மரணம் அடைந்தோரின் உறவினர்களுக்கு  அவர்களில் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணிகள் அளிக்கப்படும்”  என தெரிவித்துள்ளார்.   நேற்று மத்திய அமைச்சரை சந்தித்த செய்தியாளர்கள் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை அளிப்பது பற்றி கேள்வி எழுப்பினர்.

அப்போது மத்திய அமைச்சர் வி கே சிங், “நிவாரணத் தொகை என்பது அனவருக்கும் வழங்கும் பிஸ்கட்டுகள் இல்லை.   இது மக்களின் வாழ்க்கை பிரச்னை.  நான் இது குறித்து எந்த அறிவிப்பும் இப்போது அளிக்கும் நிலையில் இல்லை.  நான் எனது சட்டைப் பையில் எதையும் எடுத்து வரவில்லை.   மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு பணி அளிக்க அரசுப் பணி கால்பந்து விளையாட்டு இல்லை”  என கூறி உள்ளார்.

இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   டிவிட்டரில் அவருடைய பேச்சுக்கு எதிராக பல பதிவுகள் பதியப்பட்டு வருகின்றன.   “காயத்தின் மீது உப்பு தேய்ப்பது போல மத்திய அமைச்சர் வி கே சிங் பேசிய பிஸ்கட் பேச்சு அமைந்துள்ளது.  மனிதாபிமானமற்ற,  அவமானகரமான, பொறுப்பற்ற பேச்சு”  என ஒரு பதிவில் பதியப்பட்டுள்ளது